விபத்தில் வயோதிப மாது வபாத், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பஸ் சாரதி
- ரஸீன் ரஸ்மின் -
புத்தளம் ரத்மல்யாய பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி – ஆலங்குடா பி முகாமைச் சேர்ந்த அசனார் லெப்பை பக்கீர் சாஹிப் மைமூன் (வயது 71) என்கிற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரத்மல்யாய பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணிப்பதற்காக, வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த வயோதிப பெண் மீது தனியார் பயணிகள் பஸ் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று புத்தளம் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார். பஸ்ஸூம் பொலிஸ் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment