Header Ads



கொழும்பில் மேயர் வேட்பாளர் யார்..?


கொழும்பு மாநகர சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில், இந்த விடயம் இன்னும் கலந்துரையாடலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.


“இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன ஆனால் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்ரவும் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடுவார் என்ற ஊகங்கள் குறித்து கேட்டதற்கு, அவ்வாறான எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.

No comments

Powered by Blogger.