பொரலுகொட சிங்கத்துக்கு ஏற்பட்ட நிலை - பிரமருடன் காரசாரமான விவாதம் செய்த சஜித்
தேர்தலை நடத்த வேண்டாம் என இவ்வாறான கடிதத்தை அனுப்புவது பாரிய தவறு என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது குறித்த உண்மை நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் காரசாரமான பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், பிரதமர் தற்போது பியன் நிலைக்கு ஆளாகிவிட்டார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர், பிரதமர் பியன் போன்றவர் எனக் கூறியது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தந்தையே எனவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,அன்று பிரேமதாஸ பியன் பதவி போன்ற பிரதமர் பதவியில் அமர்ந்து கொண்டு ஜனாதிபதி போன்று பணியாற்றினார் எனவும் தெரிவித்தார்.பொரலுகொட சிங்கத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தாம் வருந்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment