Header Ads



போதைக்கு அடிமையான மகனை, பொலிஸாரிடம் ஒப்படைத்த தாயார்


முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வலைஞர் மடம் கிராமத்தில் போதைக்கு அடிமையான 24 அகவையுடைய மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


24 அகவையுடைய இளைஞன் வீட்டில் தந்தை இல்லாத நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார். தாயார் கஷ்டப்பட்டு உழைத்து மகனை பராமரித்து வந்துள்ளார்.


ஊசி, குடு ,உள்ளிட்ட போதைக்கு அடிமையான குறித்த இளைஞனால் வீட்டில் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றாக விற்பனை செய்து போதைவஸ்த்து பயன்படுத்துவதற்காக பயன்படுத்தி வந்துள்ள நிலையில் தாயின் மோதிரத்தினை விற்க தருமாறு வற்புறுத்திய வேளை தாயார் மகனின் தொல்லை தாங்கமுடியாத நிலையில் 29.12.22 அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


தாயின் முறைப்பாட்டிற்கு அமைய முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த இளைஞன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதி மன்றில் கடந்த 30.12.22 முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இளைஞன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 


இதன்போது குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் போதைவஸ்த்து பாவனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆறு மாத காலத்திற்கு இளைஞனை புனர்வாழ்விற்கு உட்படுத்துமாறு மன்று பணித்துள்ளது. 

No comments

Powered by Blogger.