Header Ads



இந்தத் தேர்தலோடு அரசாங்கத்தின் பயணம் நிறைவு பெறும் - திஸ்ஸ


அரசாங்கத்தின் தன்னிச்சையான பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் புரட்சிகரமான மாற்றம் இவ்வருட உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் ஆரம்பமாகும் என சமகி ஜன பலவேகவின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று -23-  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


பொதுமக்களின் கருத்துக்கு முகம் கொடுக்க முடியாத அரசாங்கம் தேர்தலை தவிர்க்க பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருவதாக குறிப்பிட்ட அத்தநாயக்க சமகி ஜனபலேக இந்த ஆண்டு முந்நூற்று முப்பத்தாறு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ளதாகவும், அந்த அனைத்து சபைகளின் அதிகாரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.