அரசாங்கத்திற்கு எவ்வித மன்னிப்பையும் வழங்கக்கூடாது
74 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் ஊழல், மோசடிகள்,முறைகேடுகள் மற்றும் மின்சார கட்டணத்தை அடிக்கடி அதிகரித்து மக்கள் மீது சுமையை ஏற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கும் எவ்வித மன்னிப்பையும் வழங்கக்கூடாது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்.தற்போது பூனைக்கு காலம் வந்துள்ளது. இதனால், அதனை தவறவிடக்கூடாது. எதிர்வரும் தேர்தலில் மக்கள் இதனை வெளிக்காட்ட வேண்டும். அது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது.
மின்சக்தி அமைச்சருக்கு மக்கள் மீது அக்கறையில்லை. தற்போது தேர்தல் வருகிறது. மக்கள் எப்போதும் எமாற மாட்டார்கள். தேர்தலில் அரசாங்கத்திற்கு மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள் எனவும் எல்லே குணவங்ச தேரர் கூறியுள்ளார்.
எத்தனையோ சவால்களுக்கு மத்தியில் தற்போது மக்கள் ஆணை கிடைத்துவிட்டது. இனி அதை மிகச் சரியாகப் பாவித்து மக்களாட்சியை நிறுவுவது மக்களின் கடமையாகும். இந்த வாய்ப்பை இல்லாமல் செய்துகொண்டால் அதற்கு முழுப் பொறுப்பையும் பொதுமக்கள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். இனி மக்களால் நியமிக்கப்படும் ஆட்சி பிழை செய்தால் அதற்கு அவர்களையே குறை கூறிக் கொண்டு மௌனமாக இருக்க வேண்டும். அதனால் பொதுமக்கள் அவர்களுடைய வாக்கை மிகச் சரியான முறையில் சிந்தனை செய்து மிகவும் தகுதிவாய்ந்தவர்களுக்கு வழங்குமாறு பொதுமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன்.
ReplyDelete