Header Ads



இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தின கல், மீண்டும் நாட்டுக்கே வந்தது - நடந்தது என்ன..?


இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தின கல் விற்பனை செய்யப்படாமல் மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.


2021 ஆம் ஆண்டு இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள இந்த இரத்தினகல் சுவிட்சர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அதன் அங்கீகாரத்தைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


ஆனால் துரதிஷ்டவசமாக இந்த இரத்தின கல்லை எடுத்துச் சென்ற குழுவினரால் அதனை விற்க முடியாமல் போனதால் கடந்த வாரம் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.


ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்தவுடன் அதனை விற்போம் என்று குழு தெரிவித்துள்ளது. குழுவின் கூற்றுப்படி, அவர்கள் துபாயை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துடன் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டனர், இரத்தின கல்லுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க குறித்த நிறுவனம் முன்வந்தது.


வணிக மதிப்பை விட நீல இரத்தின கல் அதிக அருங்காட்சியக மதிப்பைக் கொண்டுள்ளது என்று தலைவர் கூறினார். ibc

No comments

Powered by Blogger.