ஞானசாரரை எப்போது கைது செய்வீர்கள்..?
கண்டி தலதா மாளிகையில் பாதுகாக்கப்பட்டு பௌத்த மக்களால் உயர்வாக மதிக்கப்பட்டு வணங்கப்படுகின்ற, புத்த பெருமானின் 'புனிதப் பல்' ஒன்றை ('ලබ්බ' என்ற வார்த்தைப் பிரயோகத்தினால்) ஒரே ஒருமுறை இழிவு படுத்தி பேசிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கள பௌத்தரும், சுதந்திர ஊடகவியலாளருமான சேபால் அமரசிங்க என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த தர்ம போதனைகளை பின்பற்றும், பெரும்பான்மையான சிங்கள மக்களின் உள்ளங்களை, புண்படுத்தும் விதத்தில் அமைந்த அவரது பேச்சு கண்டிக்கத் தக்கதே.
அதேவேளை, இலங்கையில் வாழும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்களது உணர்வுகளை துச்சமாக மதித்து, உலகெங்கும் பரந்து வாழும் இரண்டாவது பெரும்பான்மை இனமான ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தமது உயிரிலும் மேலாக போற்றி வணங்கும் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் இதே வார்த்தையாலும் இதை விட படு மோசமான வார்த்தைகளாலும் தூசித்து பொது மேடைகளிலும் ஊடகங்களிலும் பல முறை மிகக் கேவலமாக பேசித்திரிந்த மதகுருமார் உட்பட ஏனைய பிரஜைகளையும் இதுவரையில் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள், அதிகாரிகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட வேண்டியுள்ளது!
என்னே நீதி!
எங்கே தர்மம்??
Naeemullah Masihudeen
Post a Comment