முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக, பைஸல் ஆப்தீன் நியமனம்
- NM Ameen -
அரநாயக்க தல்கஸ்பிடியைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை முதற் தர உத்தியோகஸ்தரான பைஸல் ஆப்தீன் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹும் எம் .யூ.இசட் ஆப்தீன் ஓய்வுபெற்ற ஆசிரியை மர்ஹூமா நபீஸா தம்பதிகளின் புதல்வரான இவர் சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக அரநாயக்க பிரதேச செயலாளளராகப் பணிபுரிந்த பிரதேசத்தின் சகல தரப்பினரதும் அபிமானத்தைப் பெறற்றவராவர்.
இந்த உயர்பதவி க்கு நேர்முகப் பரிட்சையில் தெரிவாகியது குறிப்பிடத்தக்கது.
சகலரும் இவருக்கு இப்பணியை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
கடந்த ஆறு ஆண்டுகளாக அரநாயக்கா பிரதேச சபையின் உதவிச் செயலாளராக பணிபுரிந்து வரும் ஜனாப் பைஸல் ஆப்தீன் அவர்கள் மிகவும் நேர்மையான, வினைதிறன்மிக்க ஒரு நிர்வாகி, அவருடைய காலத்தில் அரனாயக்கா பிரதேச சபை மக்களுக்கு மிகச் சிறப்பான சேவையை வழங்கியது என்றால் அது அவருடைய வினைத்திறனும் சிறந்த முகாமைத்துவமும் தான் காரணம் என்பது மட்டுமல்ல அரச பணத்தின் ஒரு சதத்தைக்கூட வீணாக்கக்கூடாது என்ற விடயத்தில் மிகவும் உன்னிப்பாக இருப்பவர். அவர் தமது கடமையைத் திறன்பட செய்வதற்கு குறிப்பாக தற்போது திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் இந்த நாட்டு மக்களும் அவருடன் ஒத்துழைக்க வேண்டும். அவர் இன்று வரை அரச நிர்வாகத்தில் கடைப்பிடித்த அவருடைய திறமையையும் நேர்மையையும் தொடர்வதற்கு இத்தகைய உதவியும் ஒத்தாசையும் இன்றி அவரால் மாத்திரம் சாத்தியமாகமாட்டாது. குறிப்பாக அரனாயக்காவில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவும் அதில் 100 மேற்பட்டவர்கள் இறந்து பலர் வீடுவாசல்களையும் வருமானத்தையும் இழந்தபோது அவர்களைச் சிறப்பாக குடியேற்றவும் அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அர்ப்பணங்களும் வரலாற்றில் பதியப்படவேண்டிய மிக முக்கியமான மைல்கற்களாகும். புதிய பதவியில் அவர் சிறப்பாக செயலாற்றவும் அவர் பணி தொடரவும் எமது இதயங்கனிந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் எப்போதும் உண்டு.
ReplyDelete