Header Ads



நுவரெலியாவில் பாதிக்கப்பட்டவர் வீடியோக்களை பகிராதீர்கள் - அனுதாபமும் மரியாதையும் காட்டுங்கள்


நானுஓயாவில் பஸ், வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன், கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.


வேனில் 9 பேர் இருந்ததாகவும் 2 பேரே உயிர் பிழைத்ததாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


“தயவுசெய்து விபத்து/பாதிக்கப்பட்டவர்களின் கவலைதரும் வீடியோக்களை குடும்பத்தை மதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் மற்றும் பரப்ப வேண்டாம். உயிரிழந்தவர்களின் குடும்பம் ஹற்ற ன் டிக்கோயாவைச் சேர்ந்ததுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து குடும்பத்தின் சூழ்நிலையில் கொஞ்சம் அனுதாபமும் மரியாதையும் காட்டுங்கள். நுவரெலியா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.