ஜனாஸா தொழுகைக்கும், நல்லடக்கத்திற்கும் மறுத்த பள்ளிவாசல் நிர்வாகம் - குடும்பத்தினர் மேற்கொண்ட தீர்மானம்
ஐஸ் போதைப்பொருள் பாவனை காரணமாக வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த நபரொருவர் கடந்த 10 ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு புனர்வாழ்வு பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் சுமார் மூன்றரை மாதங்களாக வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில், மரணமடைந்ததாக குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு மரணமடைந்த நபரின் ஜனாஸாவை தொழுகை நடாத்தி நல்லடக்கம் செய்ய அவர் வசித்துவந்த பகுதியிலுள்ள மாஞ்சோலை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மரணமடைந்த குறித்த நபரின் ஜனாஸாவை அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்னின்று தொழுகை நடாத்தி, குறித்த பள்ளிவாசல் மையவாடியிலேயே நல்லடக்கம் செய்தனர்.– Vidivelli
(எச்.எம்.எம்.பர்ஸான்)
புனர்வாழ்வு நிலையத்தில் பல வருடங்கள் கழிந்த நிலையில் மரணித்தவரை அல்லாஹ் நிச்சியம் மன்னிக்கக் கூடும். அத்தகைய ஒரு மையத் தொழுவிக்கவும் அடக்கம் செய்யவும் பள்ளி நிர்வாகம் மறுப்பது நியாமற்றது. மனிதன் செய்யும் தவறுகளுக்கு மனிதனால் தண்டனை கொடுக்க முடியாது .அவ்வாறு செய்வது உலகில் நீதிமன்றங்கள் மாத்திரம் தான், அவர்களுடைய நீதியும் வெறுமனே சாட்சிகளையும் வாதத் திறமைகளையும அடிப்படையாக வழங்கப்படும் தீர்ப்பு , அவை இறதியான தீர்ப்பல்ல. நபியவர்களின் வாழ்க்ைகயில் பல சந்தர்ப்பங்களில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் ஒருபோதும் மற்ற மனிதனுக்கு தண்டனை வழங்க எத்தனிக்கக்கூடாது இதனைத்தான் Law unto hand எனப்படும் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய யாரும் முற்படக்கூடாது. அது அழிவையும் நாசத்தையும் தான் இறுதியில் ஏற்படுத்தும்.
ReplyDelete