சிறுமியினதும், இளைஞனினதும் சடலங்கள் மீட்பு
கலேவெல, அடவல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றின் இருந்து சிறுமி மற்றும் இளைஞனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாக, விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நன்னடத்தையின் பின்னர் சிறுமி சில நாட்களுக்கு முன்னதாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Post a Comment