திருகோணமலைக்கு வந்துள்ள போர்க் கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS டில்லி கப்பல் இன்று (15) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய குறித்த கப்பலை வரவேற்றது இலங்கை கடற்படை.
திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள யுத்த கப்பலான INS டில்லி கப்பல், 163.2 மீட்டர் நீளமுடையது.
390 கடல் அல் பரப்புடைய, இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் ஷிருஸ் ஹூசென் அசாத் செயற்படுகின்றார்.
கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை மற்றும் தன்னார்வ கடற்படையின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நாளை(16) கிழக்கு கடற்படை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
INS டில்லி கப்பல் எதிர்வரும் 17ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது.
போர்க்கப்பல்கள் இலங்கைத் துறைமுகத்துக்கு விஜயம் செய்வது இராஜதந்திர மட்டத்தில் மிகவும் பாரதூரமான விடயமாகும். அதாவது இலங்கைக்கு வரும் கப்பல்களின் சொந்தக்கார நாடுகளின் முக்கியமான செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கு எத்திவைப்பது தான் அவர்களுடைய விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். அந்தச் செய்தியின் சாராம்சம், எங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு எதிராக நீங்கள் செயற்பட்டால் அல்லது அது தொடர்பான தீர்மானங்கள் எடுத்தால் உங்களுக்கு பாடம் கற்பிப்பது இது போன்றவை தான். அதனை முன்கூட்டியே எங்களைப் பார்த்துக் கொண்டு எங்களுடன் முரண்படத் தயாராகுங்கள். இந்து சமுத்திர பிராந்தியத்தில் புவியியல் சார்ந்த அரசியல் செய்யும் அதிகாரமும் பலமும் உங்களிடம் இல்லை. அதன் சொந்தக்காரன் நாம்தான் இதோ பாருங்கள் என்ற செய்தியை இந்த நாட்டு அரசியல்வாதிகளுக்குக் கூறிவிட்டு நாளை அந்தக்கப்பல் புறப்பட்டுச் செல்லுமாம். பெரியவர் நேற்று யாழ்ப்பாணம் சென்று பொதுமக்களின் ஒட்டுக்களைச் சுருட்ட கற்பனை பண்ணியதன் விளைவான இந்தியாவின் செய்தி இதுதானே எனவும் எண்ணத் தோன்றுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete