மைத்திரி உள்ளிட்டவர்கள் நட்டஈட்டை செலுத்தாவிட்டால் என்ன..?
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நட்ட ஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐந்து பேரும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நட்ட ஈட்டுத் தொகையை செலுத்த வேண்டும். தவறினால், நீதிமன்றத்தை அவமதிப்பவர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியுமென ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி. சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லாவிட்டால் நீதிமன்றத்தை அவமதித்ததற்கு தண்டனை பெற்றுக் கொள்ளாமலிருப்பதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கிணங்க நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உரிய நபர்கள் செயல்பட்டுள்ளார்களென உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமானால், அவர்களின் சொத்துக்கள் அரச உடமையாக்கப்படும்.
அல்லது அவர்களுக்கு தண்டனை தீர்ப்பளிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Post a Comment