கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் மகத்தான பணி - புற்று, மார்பக, காச நோய், போதை பற்றி ஒரே அமர்வில் விளக்கம்
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து நடத்திய புற்று நோய், மார்பக புற்று நோய், காச நோய், மற்றும் அதிகரித்து வரும் போதை பயன்பாடு ஆகிவை தொடர்பில் பள்ளிவாசல்களின் இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் நிர்வாகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று சனிக்கிழமை (21) கொழும்பில் நடைபெற்றது.
சட்டத்தரணிகள், விசேட மருத்துவ நிபுணர்கள், போதைத் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரிகள், உலமாக்கள் விசேட நிபுணர்கள், பள்ளிவாசல நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி கொழும்பு, மாநகர சபை வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளை நிகழ்த்தவும், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் தீர்மானித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment