தசுன் ஷானகவுக்கும், ரோகித் சர்மாவுக்கும் பாராட்டு
இலங்கை - இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதது.
அதன்படி களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் குவித்தது.
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 45ஆவது சதத்தை விளாசி 113 (87) ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து 374 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக சவாலை கொடுக்கும் வகையில் துடுப்பெடுத்தாடி அரை சதம் கடந்து வெற்றிக்கு போராடினார்.
நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய அவர் வெற்றி பறிபோனாலும் குறைந்தபட்சம் சதத்தை நெருங்கி கடைசி ஓவரில் 98 ரன்களில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி 4ஆவது பந்தில் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார் என்பதற்காக தசுன் ஷானகவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.
அதன் காரணமாக போட்டியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டதுடன் தசுன் ஷானக ஏமாற்றமடைந்த நிலையில் அதை சோதிப்பதற்காக நடுவரும் 3ஆவது நடுவரை அணுகினார்.
அப்போது வேகமாக ஓடி வந்த இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா முதலில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு போராடும் அவரை சதமடிக்க விடாமல் அவுட்டாவதற்கு இது சரியான வழியல்ல என்று சிரித்த முகத்துடன் முகமது சமியிடம் பேசி சமாதானப்படுத்தினார்.
அவரது வார்த்தைகளை புரிந்து கொண்ட முகமது ஷமி தாமாகவே நடுவரிடம் சென்று தாம் முன்வைத்த அவுட்டை வாபஸ் பெறுவதாக கூறினார். அதை தொடர்ந்து கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 12 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்த தசுன் ஷானக 108* (88) ரன்களை குவித்தார்.
போட்டியின் முடிவில் “சிறப்பாக விளையாடிய தசுன் ஷானகவை நாங்கள் அந்த வழியில் அதுவும் 98 ரன்னில் அவுட் செய்ய விரும்பவில்லை” என்று ரோகித் சர்மா தெரிவித்தார். அந்த வகையில் வெற்றி பறிபோனாலும் தனி ஒருவனாக போராடி தகுதியான சதத்தை நெருங்கிய தசுன் ஷானகவுக்கும் மன்கட் அவுட்டை வாபஸ் பெற்ற ரோஹித் சர்மாவையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
Post a Comment