கத்தார் அறக்கட்டளையுடன், மீண்டும் கொண்டாட்டம்
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்த கத்தார் அறக்கட்டளையின் பிரதிநிதிகளை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் இச்சந்திப்பு இன்று புதன்கிழமை 11 ஆம் திகதி இடம்பெற்றது.
கத்தார் அறக்கட்டளை தொண்டுநிறுவன தலைமை நிர்வாக அதிகாரி யூசுப் அல்-குவாரி உள்ளிட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
தொண்டு நடவடிக்கைகள் மூலம் ஒத்துழைப்பின் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment