உண்டியல் குலுக்கி மைத்திரிக்காக பணம் சேகரிப்பது ஆரம்பம் - முதல்நாளில் சேர்ந்த பணம் எவ்வளவு தெரியுமா..? (படங்கள்)
ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபா நட்டஈட்டு தொகையை செலுத்துவதற்காக, கலைஞர் சுதத்த திலகசிறி நேற்று (17) கொழும்பு – கோட்டையில் உண்டியல் குலுக்கி பணம் சேகரித்தார்.
அதன்போது, திரட்டப்பட்ட 1810 ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் கையளித்தார்.
நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபா நட்டஈட்டை செலுத்தும் அளவிற்கு தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும், அதனால் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
அப்பாவி மக்களைப் பயன்படுத்தி, உண்டியலில் பணம் சேர்க்கும் நாடகத்தை அரங்கேற்றி பொதுமக்களின் அனுதாபம் பெறமுடியுமென்ற கற்பனை தான் இந்த மடத்தனமான நாடகத்தை அரங்கேற்ற மைத்திரியின் சிந்தனை. அது அவருடைய வாக்குகளை இன்னும் கீழ்த்தரத்துக்குக் கொண்டு செல்லும் என்பதை பின்னர் கண்டு கொள்வார், ஏனெனில் இந்த நாட்டு மக்கள் மைத்திரி நினைக்கும் அளவுக்கு மூளை கெட்டவர்களல்ல.
ReplyDelete