Header Ads



களுத்துறையில் கட்டுப்பணம் செலுத்திய பொதுஜன பெரமுன


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.


களுத்துறை மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த மற்றும் பலர் இன்று இதில் கலந்துகொண்டனர்.


ஜனவரி 6, 8 மற்றும் 15 ஆகிய திகதிகளைத் தவிர, ஜனவரி 19 ஆம் திகதி வரை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.


இதேவேளை, தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

No comments

Powered by Blogger.