தேர்தலை நடத்த தேவையான நிதி, எவ்வித தடையும் இன்றி பெற்றுக்கொடுக்கப்படும் - திறைசேரி
தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை தடங்கலின்றி பெற்றுக்கொடுக்க முடியும் என திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள முடியாது என வௌியாகின்ற கருத்துகள் தொடர்பில் திறைசேரி அதிகாரிகளை நேற்று அழைத்து தேர்தல்கள் ஆணைக்குழு வினவியுள்ளது.
தேர்தல் என்பது அரசியலமைப்பு சார்ந்த விடயம் என்பதால், அதற்கு தேவையான நிதி எவ்வித தடையும் இன்றி பெற்றுக்கொடுக்கப்படும் என இதன்போது திறைசேரி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை நிதி அதிகாரி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
திறைசேரியின் இந்த அறிவிப்பைக் கேட்டு, தேர்தல் நடாத்த பணத்தை அச்சடிக்க வேண்டும் என பொய் மூட்டையை அவிழ்த்து விட்ட அந்த நிதி இராஜாங்க மந்தி(ரி)என்ன கூற இருக்கின்றார்? இது போன்ற மந்தி(ரி)களுக்குச் சரியான தண்டனையைக் கொடுக்க மிகவும் தகுதிவாய்ந்தவன் உலகங்களையும் அனைத்துப் படைப்புகளையும் இரட்சிக்கும் அந்த இறைவன் மாத்திரம்தான்.
ReplyDelete