Header Ads



இலங்கை விடயத்தில் பங்களாதேஷ் நாட்டின் தாராள மனசு


200 மில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வங்கி இன்று ( 12 ) வழங்கியுள்ளது . 


பெயர் குறிப்பிட விரும்பாத , பங்களாதேஷ் மத்திய வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார் . 


பல மாதங்களாக கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இலங்கை , 2021 மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொண்டது . 


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் , அந்தக்கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது , ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டது . 4 இலங்கை அந்நிய செலாவணி இருப்புக்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் , குறித்தக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தது . 


புதிய காலக்கெடுவின்படி , இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் . 


பங்களாதேஷூம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் உட்பட பல்தரப்பு கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கடன் உதவியை நாடியுள்ளது . 


பங்களாதேஷ் மத்திய வங்கியின் தரவுகளின்படி , பங்களாதேஷின் கையிருப்பு 2023 ஜனவரி 11 அன்று 32.52 பில்லியன் டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது .

1 comment:

  1. பங்களாதேஷ் என்பது பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்ட முஸ்லிம் ஆட்சியாளர்களால் நாட்டுமக்களின், நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு ஆளப்படும் நாடு. அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தால் மற்ற ஒரு நாட்டுக்கு நாம் உதவி செய்தால் அதற்கு இறைவன் நமக்கு நல்ல நன்மையை இரு உலகிலும் கண்டிப்பாகத் தருவான் என்ற விசுவாசத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்கு செய்யும் தருமம் நமக்குக் கைகொடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் செய்யும் உதவியைத்தான் அவர்கள் இலங்கைக்குச் செய்கின்றார்கள். அதுதவிர மற்றொரு நாட்டுக்கு உதவி செய்யும் தரத்தில் அவர்கள் இல்லை. இந்த இரகசியத்தைப் பிச்சைக்காரர்களிடமும் பிச்சை வாங்கி வாழ எத்தனிக்கும் இலங்கையின் வீணாப் போன அரசியல் வாதிகள் எப்போது புரிந்து கொள்வார்கள் என்பது வெறும் கற்பனை மாத்திரம் தான். பங்களாதேஷ் நாட்டுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.