Header Ads



சென்னையில் மணல் லொறி சக்கரத்தில் சிக்கி, இலங்கையர் உயிரிழப்பு


தமிழகம் சென்னையில் இலங்கையான மென்பொருள் பொறியியலாளர் வீதி விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


சென்னை போரூர் லட்சுமி நகரில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த தமிழர்களான செல்வகுமார் தம்பதியினரின் 23 மகளான ஷோபனா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வரும் நிலையில் அவரது சகோதரான ஹரீஸ் தனியார் பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்றபோது மதுரவாயல் பைபாஸ் சாலை, சேவீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் அருகில் சென்ற வான் மீது உரசியது. இதில் அவர் தம்பியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்துள்ளார்.


அப்போது, பின்னால் வேகமாக வந்த மணல் லொறியின் சக்கரத்தில் ஷோபனா சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. அவரது மரணம் குடும்பத்தை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments

Powered by Blogger.