Header Ads



நாட்டை வீழ்த்திய ராஜபக்சாக்கள் குறித்து, மைத்திரி கூறியுள்ள விடயம்


நாட்டை படுவீழ்ச்சியடையச் செய்த ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோர் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்திருந்தால் நாடு இந்த மோசமான நிலைக்குச் சென்றிருக்காது என கூறியிருந்தார்.


 அவர் மேலும் தெரிவிக்கையில்,


ராஜபக்சக்கள் தங்கள் குடும்ப ஆட்சியில் மாத்திரம் கவனம் செலுத்தியதன் விளைவாகவே இந்த நாடு படுமோசமாக வீழ்ச்சியடைந்தது.


இறுதியில் ராஜபக்சக்களும் ஆட்சிப்பீடத்திலிருந்து மக்களின் எழுச்சியால் தூக்கி வீசப்பட்டார்கள்.


நாட்டைப் படுவீழ்ச்சியடையச் செய்த ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.


ராஜபக்சக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் எமது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூட்டணி அமைக்காது என தெரிவித்தார்.

1 comment:

  1. அடுத்த கள்ளன் மைத்திரி, அவருடைய களவுகளும் கடத்தல்களும் தெரிந்தவர்கள் அறிவார்கள். இரவோடு இரவாக செய்த கள்ளக்கடத்தல்களும் நாட்டின் சொத்தை களவாடியவைகளும் தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். இவருடைய சகா மாபெரிய கள்ளன் பற்றி பேசி குப்பையைக் கிளராமல்,இவர் வாயைப் பொத்திக் கொண்டு இருந்தால் அது எல்லோருக்கும் நல்லதாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.