சுதந்திரமானதும், நீதியானதும் தேர்தலுக்கான இயக்கத்தின் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் உடனான நேர்காணல்
தேர்தல் தொடர்பில் அதனை கண்காணிக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் பல செயற்படுகின்றது இதன் ஒரு பகுதியாக சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தன் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் உடனான நேர்காணல் பின்வருமாறு
01.உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதில் தங்களின் நிலைப்பாடு என்ன??
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான காலம் ஒருவருட நீடிப்பின் பின் சட்டபூர்வமாக வழங்டப்பட்ட போதிலும் தற்போது ஒரு வருட காலமானது மார்ச் மாதமளவில் நிறைவுக்கு வரவுள்ளது. இது போன்று ஜனநாயக ரீதியாக கட்டாயமாக தேர்தல் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும் .தேர்தல் ஆணைக்குழு மூலமாக தேர்தல் நடாத்தப்படுவது மற்றும் வேட்பு மனு தாக்கல் தொடர்பில் வர்த்தமாணி மூலமான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது இம்மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 21 வரை அதற்கான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது இருந்த போதிலும் தற்போது மக்களுடைய உரிமைகளை மதித்து ஜனநாயக ரீதியான தேர்தல் நடாத்தப்பட்டு உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது பற்றி கெபே அமைப்பு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
02.எல்லை நிர்ணய ஆணைக்குழு நிறுவப்பட்டமை உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறையில் எவ்வகையான தாக்கத்தை செலுத்துகிறது???
உள்ளூராட்சி மன்ற தேர்தலை பொறுத்தமட்டில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2018ல் எல்லை நிர்ணய ஆணைக்குழு உருவாக்கப்பட்டது இதில் கலப்பு வட்டார விகிதாசார முறை மூலமாக 8000 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.2018காகு முன்னர் 4000க்கும் மேற்பட்டோர்களே காணப்பட்டார்கள். இதனை தற்போது எல்லை நிர்ணய ஆணைக்குழு மூலமாக 3000 ம் வரை குறைத்து 5000 உறுப்பினர்கள் வரை தற்டோதைய எல்லை நிர்ணய ஆணைக்குழு தீர்மானித்து வருகிறது .
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பில் தெரிவித்ததாவது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு எல்லை நிர்ணய மீள் ஆணைக்குழு மூலமாக எந்தவித பாதிப்பும் ஏற்படாது தேர்தல் நடாத்தப்படுவது பற்றியே முன்னெடுப்புக்களை செய்து வருகிறோம் என தெரிவித்திருந்தார்.எது எவ்வாறாக இருந்தாலும் தேர்தல் நடாத்துவது பற்றியே கோரிக்கை முன்வைக்கப்பட்டும் வருகின்றது.
03.உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது பெண் வேட்பாளர்கள் 25 வீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை எவ்வகையாக கருதுகிறீர்???
உள்ளூராட்சிமன்றங்களில் பெண் பிரதிநிதிகள் தொடர்பில் கடந்த காலங்களில் பேசப்பட்டாலும் கூட பாராளுமன்றத்தில் ஆறு வீதத்தை தாண்டவில்லை இருந்த போதிலும் 2018ல் நடைபெற்ற தேர்தலின் போது 25 வீதமான உறுப்பினர்கள் பெண்கள் அங்கம் வகிக்க வேண்டும் என்பது பற்றி பேசப்பட்டாலும் அது மேலதிகமாக பட்டியலில் மாத்திரம் இடம் பிடித்து அது நடை முறை சாத்தியமாக்கப்படவில்லை இதை விடுத்து பெண்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பங்களிப்புக்களை மேற்கொள்ளக்கூடிய பிரதிநிதிகள் தேர்தலில் பெயரளவின்றி இறக்கப்பட்டு திறம்பட செயற்பட வேண்டும் தங்களது அமைப்பு மூலமான ஜனனி திட்டம் ஊடாக ஒரு வருட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுடன் இடம் பெற்ற திட்டத்தில் குறிப்பிட்ட உறுப்பினர்களே பங்கேற்றிருந்தனர் இது போதாமையாகவுள்ளது இவ்வாறாக சகல தேர்தல் நிலையிலும் பெண்கள் இறங்க வேண்டும் என்பதுடன் சமூக செயற்பாடு மிக்க பெண் தலைமைகளை சமூகத்தில் உருவாக்க வேண்டும் .
04. தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலை நீடிப்பது தொடர்பிலும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டாலும் அதனை ஏற்க வேண்டாம் என அரச தரப்பில் பேசப்படுகிறது இது தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன???
இவ்வாறான விடயம் தொடர்பில் உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாம் உட்பட ஏனைய தேர்தல் கண்காண்காணிப்பு அமைப்புக்கள் இது தொடர்பில் வலியுறுத்தினோம் இது தேர்தல் வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாகும் இந்த கருத்தினை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரே இவ்வாறு கடிதம் மூலமாக கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என தெரிவித்திருந்தார்.
இதற்கு உடனடியான பதிலடி கொடுக்கப்பட்டு அனைத்து தெரிவித்தாட்சி அலுவலகர்களுக்கும் தேர்தல் நடைபெறுவது தொடர்பிலான முன்னெடுப்புக்களை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு வேண்டிக் கொண்டது. இவ்வாறாக தேர்தல் நடாத்தப்பட்டு ஜனநாயக ரீதியான மக்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பாகவும் எமது கெபே அமைப்பின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
Post a Comment