எனது படம் பரவுவதை கவனித்தேன், தேர்தல் தொடர்பில் தசுன் ஷானக்கவின் விளக்கம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், போட்டியிடும் அரசியல் கட்சிகளுடன் தமக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி பிரச்சாரத்துடன் எனது படம் பரவுவதை நான் கவனித்தேன். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தமக்கும் தொடர்பில்லை.தாம் எந்தவொரு கட்சியினதும் உறுப்பினராக செயற்பட்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், என்னுடைய உண்மையான அன்பும், ஆர்வமும் கிரிக்கெட் விளையாடுவது தான். தாய் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவதே தனது உண்மையான ஆர்வம் என தசுன் ஷானக்க ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment