Header Ads



குரங்குக் கூட்டத்தினால் உயிரிழந்த பெண்


குருணாகல் கலேவல பிரதேசத்தில் புளியமரம் ஒன்றின் கிளை உடைந்து தலையில் விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.


62 வயதான பெண்ணே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த பெண் வசித்து வந்த வீட்டுக்கு நேற்று மாலை குரங்கு கூட்டம் ஒன்று வந்துள்ளதுடன் அவற்றை விரட்டுவதற்காக பெண் வீட்டுக்கு பின்புறம் சென்றுள்ளார்.


அப்போது இந்த பெண் வீட்டுக்கு பின்புறம் இருக்கும் புளியமரத்திற்கு அடியில் சென்றுள்ளதுடன் அதில் இருந்த குரங்குகள் கிளையை உலுப்பியுள்ளன.


இதனால், மரக்கிளை உடைந்து கீழே நின்ற பெண்ணின் தலையில் விழுந்துள்ளது. புளியமரக்கிளை தலையில் விழுந்ததில் படுகாயமடைந்த பெண் கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். tw 


No comments

Powered by Blogger.