அலுவலக நேரத்தில் அரச ஊழியர்கள் பேஸ்புக், வட்ஸப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்கக் கூடாது
பொது நிர்வாக அமைச்சின் புதிய செயலாளராக திங்கட்கிழமையன்று (02) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ஊழியர்கள் மத்தியில் உரையாற்றி போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
ஊழியர்கள் பலர் வேலை நேரத்தில் தொலைபேசியில் நேரத்தை வீணடிப்பதை தான் அவதானித்ததாகவும் காலையில் வேலையை ஆரம்பிக்கும் தொடங்கும் போது அதில் உள்ள பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளைப் பார்க்க வேண்டாம் என்று குறிப்பிட்டார்.
ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட அலைபேசியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாள் முழுவதும் தொலைபேசியில் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அதனால்தான் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு வரும்போது அலைபேசிகளை லொக்கரில் வைத்துவிட்டு போகும் போது எடுத்துச் செல்ல முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட வேண்டுமா என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்த அவர், தேவைப்பட்டால், அந்த நடவடிக்கையை எடுக்கநேரிடும் என்றும் தெரிவித்தார்.
கடந்த இருபத்திஐந்து வருடங்களாக தொடரும் இந்த அவலத்தை இப்போதுதான் இந்த உள்நாட்டு அமைச்சின் செயலாளருக்கு விளங்கியிருக்கின்றது. பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் இந்த அவலம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அரச அலுவலகங்களில் தொடர்கின்றது. அரச பணி புரியும் ஆண்களும் பெண்களும் காரியாலயத்துக்கு வந்தவுடன் காலைச்சாப்பாடு சாப்பிடுவதும் தொடர்ந்து பேஸ்புக், வட்சப் செக் பண்ணுவதும்தான் முதல் வேலை, அது காலை பத்து மணிக்கு மேலும் தொடரும். இனி தேனீர் இடைவேளை அத்துடன் தேனீர் சாலையில் ஊர்பலாயும், தனிநபர் விமர்சனங்களும் தொடரும். இடையில் வருபவர்களுக்கு, பைல் வரவில்லை. கையொப்பமிட தலைவர் இல்லை எனக்கூறிமுடிய பகல் உணவு இடை வௌி. இப்படித்தான் காலத்தை வீணடித்து மாதம் முடிய முன்பு சம்பளத்தை எடுக்கும் பிரயத்தனம். இந்த அவலம் எப்போது நீங்கும் என யாருக்கும் எதுவும் கூறமுடியாது என்ற அளவுக்கு இந்த அநியாயம் சமூகத்தில் புரையோடிப் போய் இருக்கின்றது. அதாவது நாட்டை ஆளும் அரசாங்கம் மோசம். அரச அதிகாரிகளும் பொதுமக்களும் அதைவிட மோசம். இரகசியம் அதுதான். அதனைத் திருத்த ஒவ்வொரு தனிநபரும் திருந்தாவிட்டால் நிலைமை நாளுக்கு நாள் பொருளாதாரத்தைப் போல் மிகவும் மோசமாகிக் கொண்டே போகும்.
ReplyDelete