Header Ads



தான்சானியா நாட்டு ஜனாதிபதியிடம் இருந்து, ரணில் பாடம் கற்றுக் கொள்வாரா..?



2022 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை ரத்து செய்ய, தான்சானியா ஜனாதிபதி எடுத்த தீர்மானம் இலங்கைக்கு ஒரு பாடமாக அமையும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.எ.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.


தான்சானியாவில் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பான செய்தி அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட விஜேவர்தன, கிழக்கு ஆபிரிக்கத் தலைவரிடமிருந்து இது ஒரு நல்ல பாடம் என்று டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கையின்படி, தான்சானியாவின் ஜனாதிபதி, சாமியா சுலுஹு ஹசன் (Samia Suluhu Hassan), 2022 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான விடுதிகளை கட்டுவதற்கு நிதி ஒதுக்கத்தை பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.


அந்த நாட்டின் 61ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு 445,000 ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்தப் பணம் நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளுக்கு எட்டு விடுதிகளை கட்டப் பயன்படுத்தப்பட்டது.


எவ்வாறாயினும், தான்சானியா கொண்டாட்டங்களை ரத்து செய்வது இது முதல் முறை அல்ல.


2015 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி ஜோன் மகுஃபுலி கொண்டாட்டங்களை ரத்து செய்தார். அதற்கான ஒதுக்கத்தை வணிகத் தலைநகரான டார் எஸ் சலாமில் ஒரு வீதியை கட்டுவதற்கு பயன்படுத்தினார்.


அவ்வாறே, 2020 ஆம் ஆண்டிலும், சுதந்திர தின கொண்டாட்டங்களை ரத்துசெய்து அதனை மருத்துவ பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.


தான்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி ஹசன், அதனைபோலவே சுதந்திர தின கொண்டாட்டங்களை ரத்துசெய்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அவர் ஒருபோதும் பாடம் கற்றுக் கொள்ளவோ அது பற்றிச் சிந்திக்கவோ அவருக்கு நேரமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.