Header Ads



தமிழ் தேசியக் கூட்டமைப்பை, ரணில் பிளவுபடுத்தி விட்டார் - கருணா


புலிகள் இயக்கத்தை எவ்வாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பிளவுபடுத்தினாரோ அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிரித்துள்ளதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறிய அவர், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ தற்போது தமிழ் கட்சிகள் பிரிந்துவிட்டால் எங்களுடைய வாழ்க்கை இழந்து போய்விட்டதாக பேசுகின்றார்கள்.


ஒன்றாக இருந்து தங்கள் தங்களுடைய குடும்பங்களையும், சொந்த பந்தங்களையும் வளர்த்ததைத் தவிர தமிழ் மக்களுக்கோ தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கோ என்ன நடைபெற்றுள்ளது.


மாவீரர்தினம் வந்ததும் மண்வெட்டியை தூக்கி வைத்துக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு என்னத்தை செய்தார்கள், இனியும் ஒன்றும் நடைபெறப்போவதில்லை.


பிரிந்து செல்வது நல்லது. பிரிவதால் எமக்கு ஒரு கவலையும் இல்லை.


ஏனைய கட்சிகள் எங்களுக்கு அழைப்பு விட முடியாது. ஏனென்றால் நாங்கள் தனித்துவமாக போய் கொண்டு இருக்கின்றோம். அழைப்புக்கள் தலைமைக்கு வந்த வண்ணம் தான் உள்ளது.


ஆனால் எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பினால் லஞ்சம், ஊழல் தவிர்த்து வேலை செய்ய விரும்பினால் யாராக வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.


அதிபர் ரணில் விக்ரமசிங்க தந்திரம் மிக்கவுள்ள ஒருவர். 70 வருட பிரச்சினையை 4 ஆம் திகதிக்குள் தீர்வு தருவதாக அறிவித்துவிட்டார்.


பின்னர் தமிழ் கட்சிகள் அனைத்தும் சேர்ந்திருந்தால் தான் தீர்வை கொடுக்க முடியும் என்பதை அறிவிப்பார். அதற்காக தான் தமிழ் கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளது.


முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்தார். இப்போது கூட்டமைப்பை உடைத்தார் அவ்வளவே” - என்றார்.   ibc

1 comment:

  1. இன்னும் இந்த தமிழ் பயங்கரவாதி வெளியில் இருப்பதே இலங்கையின் இறைமையின் பலஹீணத்தை காட்டுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.