Header Ads



சுவிஸர்லாந்தில் விபத்து - இலங்கையர்களான தந்தையும், மகனும் உயிரிழப்பு


சுவிஸ்லாந்தின் ஆறோ மாநில நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.


குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாகவும், தற்போது சுவிஸ்லாந்தின் சென்.கேலன் (St.Gallen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் (கண்ணன்) எனப்படும் நபரும், அவரது மகனும் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்து நடைபெற்ற இடத்திலேயே அவரது மகன் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரது தந்தையும் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.