பதவி விலகுகிறேன் - உத்தியோகபூர்வமாக அறிவித்தார் முஜிபுர் ரஹ்மான் - வருகிறார் பௌஸி
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நாடாளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் , கொழும்பு மாநகர சபையில் போட்டியிடவுள்ளதால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்தார்.
கட்சியின் செயற்குழு எடுத்த ஏகமானதான முடிவின் பிரகாரம் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் இன்று(20) பாராளுமன்றில் தெரிவித்தார்.
இந்த நிலையில், முஜிபுர் ரஹ்மானின் வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment