தமக்கு எதிராக சூழ்ச்சி செய்யப்படுவதனை ஒப்புக்கொள்ள கோட்டாபய மறுத்துவிட்டார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு அப்போதைய சில அமைச்சர்களும் சூழ்ச்சி செய்தனர் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -24- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் இந்த விடயத்தை தற்போது புரிந்து கொண்டுள்ளனர் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறானவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமக்கு எதிராக சூழ்ச்சி செய்யப்படுவதனை கோட்டாபய ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார் எனவும் அதுவே அவர் வீடு செல்ல காரணமானது எனவும் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்த காலத்தில் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியதாகவும், தமக்கும் எரிபொருள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அதே அளவு எரிபொருள் தற்பொழுது இறக்குமதி செய்யப்படுவதாகவும் தற்பொழுது வரிசைகள் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment