பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை
நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக செய்திப் பணிப்பாளர்களுடன் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Post a Comment