முன்னாள் ஆளுநர் திடீர் மரணம் - தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுகையில் சம்பவம்
வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவு வண்டி மூலம் களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு, வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment