Header Ads



'கரப்பான்பூச்சி' வடை விற்றவருக்கு, விதிக்கப்பட்ட பெருந்தொகை அபராதம்


யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவத்தில், குறித்த உணவகத்திற்கு 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 04ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து,  யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் பரிசோதிக்கப்பட்டது.


இதன்போது பல்வேறு குறைப்பாடுகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இதனையடுத்து இன்றையதினம் (16) நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது எதிராளிகள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து உணவகத்திற்கு 60,000/= ரூபா அபராதமும், சமையற்கூடத்திற்கு 20,000/= அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடையினை மீள திறப்பதற்கான அனுமதியினையும் நீதிமன்றம் வழங்கியது.


இதையடுத்து சுமார் 40 நாட்களாக மூடப்பட்டிருந்த குறித்த உணவகமும், சமையற்கூடமும் நீதிமன்றின் கட்டளையினையடுத்து இன்று திறக்கப்பட்டன. 

No comments

Powered by Blogger.