ரயிலின் கதவோரத்தில் இருந்து, வீடியோ பதிவுசெய்த ஊடகவியலாளர் விபத்தில் மரணம்
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றார்.
தொழில் நிமிர்த்தம் காலி சென்று, ரயிலில் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. பயணித்துக்கொண்டிருந்த ரயிலின் கதவோரத்தில் இருந்து வீடியோ பதிவு செய்ய முயற்சித்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்
Post a Comment