கோட்டாபய பிரதமர் ஆகினால், பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியுமா..?
கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் நாடு திவாலாகிவிட்டதை சாதகமாக பயன்படுத்தி இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த குறித்த நாட்டின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தூதுவர் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார்.
இலங்கையில் உள்ள பல செல்வாக்கு மிக்க அரச அதிகாரிகளை சந்தித்த குறித்த தூதுவர், கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி பொருளாதார நெருக்கடியை தீர்க்க இலங்கை உதவ முடியும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு பெருமளவிலான கடன்களை வழங்கிய இந்த நாடு, சர்வதேச நாணய நிதியத்திடம் கோரப்பட்ட 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கு முன்நிபந்தனையான கடன் மறுசீரமைப்பிற்கு இன்னும் ஒப்புதல் வழங்காத நாடாக உள்ளமை விசேட அம்சமாகும்.இதற்கான வேறு தெரிவுகளை மறைமுகமாக முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெற வேண்டிய அவசியம் இல்லை எனவும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை போக்க தனது நாடு உதவிகளை வழங்க முடியும் எனவும் தூதுவர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment