Header Ads



சித்தியடைந்த ஒரு மாணவியின் உருக்கமான வேண்டுகோள்


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -


ஓட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலக பிரிவில் உள்ள மீறாவோடை அமீர் அலி வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி சாஹூல் ஹமீட் சம்ரத் இஷாரா தன்னோடு பரீட்சைக்கு தோன்றி சித்தியடையவில்லை என்ற கவலையில் உள்ள நண்பர்களின் பெற்றோருக்கு எழுதிய திறந்த மடல்.


அன்பார்ந்த சக நண்பர்களே, பெற்றோர்களே சமுக ஆர்வலர்களே.


நாட்டில் கல்வி புலத்தில் இந்த வாரம் பேசப்படும் முக்கிய விடயம் தரம் 05 புலமை பரிசில் பரீட்சை முடிவுகளாகும் இதில் பிஞ்சு உள்ளங்களை சித்தயடைந்துள்ளார் சித்தியடையவில்லை என்று நோவினைப்படுத்துகின்ற செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.


பரீட்சை திணைக்களம், மாகாண கல்வி திணைக்களம், வலய கல்வி அலுவலகம் என்பன எதிர்பார்க்கின்ற சித்தியடைதல் என்பது புலமை பரிசில் பரீட்சையில் நடைபெறும் இரண்டு பாடங்களிலும் தலா ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 புள்ளிகளைப்பெற்று 70 புள்ளிகளாகும் ஆனால் அதனை விடுத்து எமது சமூகம் எதிர்பார்ப்பது வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதையாகும்.


140 புள்ளிகளைப் பெற்ற ஒரு மாணவரை சித்தியடையவில்லை என்று கூறுகின்றார்கள் சராசரி ஒரு வினாப்பத்திரத்தில் 70 புள்ளிகளைப்பெற்றது சித்திடையவில்லை என்பதா சமுகத்தின் கருத்து இது ஒரு மாயை வெட்டுப் புள்ளிகளுக்கு அதிகமான புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் கல்வி கற்ற பாடசாலை பெருமை சேர்த்துக் கொள்வதும் முன்னோடி வினாப்பத்திரம் தயாரித்து விற்பனை செய்பவர்களின் வியாபார தந்திரமுமே இதற்கு முக்கிய காரணம்.


பெற்றோர்களே தங்களது பிள்ளைகள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற வில்லை என்று கவலைப்படாமல் பிள்ளையின் எதிர்கால கல்வியிலே அதிக அக்கரை செலுத்தி தொழில்வாண்மை அடையக்கூடிய கல்வி பொதுத்தராதர சாதாரன தரம் மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தர பெறுபேறுகளில் சிறந்த பெறுபேருகளை பெறுவதற்கு கவனம் செலுத்துங்கள்அத்துடன் பாடசாலை நிருவாகத்தையும் ஆசிரியர்களையும் குறை கூறுவதை தவிர்த்து இறைவனின் ஏற்பாட்டை பொருந்திக் கொள்ளுங்கள்.


மேலும் தரம் 05 புலமை பரீட்சையிலே வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற எத்தனையோ மாணவர்கள் உயர் கல்வி இன்றி இருப்பதையும் நீங்கள் எதிர்பார்க்காத சித்தியடையாத மாணவர்கள் இன்று உயர் கல்வியிலே சிறந்து விளங்குவதை கண்னுக்கூடாக பார்க்க முடிகின்றது எனவே எல்லாம் இறைவன் செயல் என்று நினைத்துக் கொண்டாலே போதுமானதாகும்.

No comments

Powered by Blogger.