அரச ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை
எதிர்வரும் 25ஆம் திகதி தாமதமின்றி வழமைபோன்று அரச ஊழியர்களின் சம்பளம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று(23) தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளமும் அதே நாளில் அல்லது ஒரு நாள் தாமதத்துடன் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, நிதிப்பற்றாக்குறையால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment