சாய்ந்தமருதுவில் உருவாகியுள்ள அதிடிரத் திட்டம்
சாய்ந்தமருது ஜும் ஆப்பெரிய பள்ளி வாயல் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த உணவு வங்கி வேலைத்திட்ட அங்குரார்பண வைபவம் இன்று -20- வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
ஜும் ஆப்பள்ளிவாயல் முன்றலில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறிய 80 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் எண்ணகருக்களில் ஒன்றான இவ்வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.
இன்றைய நிகழ்வில் வழங்கப்பட்ட பொருட்கள் யாவும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும் ஆப்பெரிய பள்ளிவாயலின் நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் முயற்சியின் பயனாகப்பெறப்பட்டவை என்பதுடன் இவ்வேலைதிட்டம் சாய்ந்தமருதிலுள்ள சகல கிராம உத்தியோகத்தர்.பிரிவுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment