ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட, முஹமட் சஸ்னியின் உடல்
ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாரை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செந்நெல் கிராமம் 02ஆம் பிரிவில் நெல்லுச்சேனை உடங்காறு அணைக்கட்டு நீர்த்தேக்கப் பிரதேசத்தில் வியாழக்கிழமை (5) மாலை ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களின் தகவல்களுக்கமைய பொலிஸாரினாரல் சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை செந்நெல் கிராமம் 02ஆம் பிரிவு நெல்லுச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் றஹீம் முஹமட் சஸ்னி (வயது 21) என்பவராவார்.
குறித்த மரணம் தொடர்பில் பெற்றோரால் சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மரணித்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதே வேளை சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அம்பாரை மாவட்ட தடயவியல் பொலிஸார் நேரில் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment