Header Ads



அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்த அறிவிப்பு



சுற்றுலா விசா அனுமதியில் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு சென்று விசா அனுமதி காலம் முடிந்து சிரமங்களுக்கு உள்ளாகி இருக்கும் இலங்கையர்களுக்கு அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.


இதற்கு அமைய தூதரகம் சிறப்பு தொலைபேசி இலக்கம் ஒன்றையும் வழங்கியுள்ளதுடன் அதன் ஊடாக தொடர்புக்கொண்டு தம்மை பதிவு செய்துக்கொள்ளுமாறு அறிவித்துள்ளது.


சுற்றுலா விசாவில் சென்று விசா அனுமதி இரத்துச் செய்யப்பட்டு அல்லது நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்களுக்கு உதவ தூதரகத்தை தொடர்புக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.


+97126316444/+97126346481 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்புக்கொண்டு அறிவித்து தம்மை பதிவு செய்துக்கொள்ளுமாறும் பதிவு செய்யும் கடைசி திகதி 13-01-2023 எனவும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.