சுயேற்சையாக இன்பம் கண்டவர்கள், கட்சிகளுக்கு வாக்கு கிடைக்காது என மேற்கொள்ளும் முயற்சி
- Ismathul Rahuman -
கட்சியில் போட்டியிட்டால் வாக்குக் கிடைக்காது என்ற நம்பிக்கையில் பலரும் சுயேற்சையாக போட்டியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபையின் தற்போதைய உறுப்பினர்களில் பலரும் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் சுயேற்சைக் குழுக்களாக களமிரங்க ஆயத்தமாய் வருகின்றனர்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன, ஐதேக மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணியில் போட்டியிட்டால், மக்களின் ஆதரவு இக்கட்சிகளுக்கு இல்லாததினால் மக்கள் இக் கட்சிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
அதனால் வெற்றிபெறமுடியாத நிலமை ஏற்படும் என்ற நிணைக்கின்றனர். இதனால் தனித்தனி சுயேற்சைக் குழுக்களாக போட்டியிட ஆட்களை தேடும் பனியில் ஈடுபட்டுள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபையில் உயர் பதவிகளில் உள்ளவர்களும் சில கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் இவ்வாறு சுயேற்சையாக போட்டியிடவுள்ளனர்.
கட்சியின் கொள்கை கோட்பாடுகள் எதுவாக இருந்தாலும், தான் வெற்றிபெற்று மீண்டும் உறுப்பினராக வருவதற்கான முறையையே இவர்கள் தேடுகின்றனர்.
சில உறுப்பினர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, சுயேற்சையாக போட்டியிட ஆயத்தமாவதை அறியமுடிந்தன.
கடந்த மாநகர சபை தேர்தலில் நீர்கொழும்பில் பெரும்பான்மையான வட்டாரங்களில் ஐதேக வெற்றிபெற்ற நிலையிலும், பல சுயேற்சைக் குழுக்களின் ஆதரவுடன் பொதுபெரமுன கட்சியே சபையை கைபற்றியது.
இதில் இன்பம் கண்ட பிரபல அரசியல் பிரமுகர்கள் இம்முறையும் தமக்கு ஆதரவான சுயேற்சைக் குழுக்களை களமிறக்க திரைமறைவில் செயல்பட்டுவருகின்றனர்.
இதேவேளை நீர்கொழும்பில் அரகலய போராட்டத்தில் முன்னனியில் செயல்பட்ட ஐதேக உறுப்பினர் ஒருவர் இம்முறை ஜேவிபி யின் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார்.
Post a Comment