Header Ads



நபிகள் நாயகத்திற்கு அநுராதபுர, மன்னர் எழுதிய கடிதம் - உண்மைகளை அம்பலப்படுத்தும் பேராசிரியர் அமரசேகர


இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்த பங்களிப்புக்கள் பற்றி சமூகக் கலந்துரையாடல்கள் (social dialogues) இடம்பெறுவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான போது இலங்கையில் வர்த்தகம் செய்த பெரும்பாலான அரபு வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்தார்கள்.


அரபு வணிகர்கள் இலங்கையில் இருந்து வெளியேறுவதன் மூலம் நாட்டின் பொருளாதரத்திற்கு பாரிய சிக்கல்கள் ஏற்படும் என்பதை அன்றைய அநுராதபுர ராஜ்யத்தின் மன்னர் 2ம் அக்போதி (king agrabodhi II ) அவர்கள் அறிந்துகொண்டார். அரபு வர்த்தகர்கள் நாட்டில் இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான முழு சமய உரிமைகளும் வழங்கப்படும் என்றும் மன்னர் உறுதியளித்தார்.


பின்னர் மன்னர் 2ம் அக்கபோதி அவர்கள் தனது விஷேட தூதுவர் ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களை சந்திப்பதற்காக மதீனா நகருக்கு அனுப்பி வைத்தார். இஸ்லாம் சமயத்தின் வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணத்தை தனது தூதுவரிடம் அனுப்புமாறும் அதன் மூலம் இலகுவாக அந்த சமயத்தை இலங்கையில் உள்ள அரபு வர்த்தகர்களுக்கப் பின்பற்றலாம் என்றும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களுக்கு மன்னர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


இலங்கை மன்னரின் தூதுவர் ஜித்தா துறைமுகத்தைை சென்றடைந்தார். பின்னர் தரைமார்க்கமாக "மதீனா" நகரை சென்றடைந்தார். இலங்கைத் தூதுவர் அங்கு சென்ற போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) இந்த உலகை விட்டும் பிரிந்திருந்தார்கள். அபூபக்ர் (றழியல்லாஹூஅன்ஹூ) என்பவரே அன்று மதீனாவை ஆட்சிசெய்து கொண்டிருந்தார். தூதுவர் அவரை சந்தித்து அநுராதபுர ராஜ்யத்தின் மன்னர் 2ம் அக்கபோதி அவர்களின் கடிதத்தை ஒப்படைத்தார்.

பேராசிரியர் தயா அமரசேகர

சமூகவியல் பீடம்

பேராதனைப் பல்கலைக்கழகம்


අනුරාධපුර රාජධානියේ රජු වූ II අග්බෝඩිගෙන් නබිතුමාට ලිපියක් - මහාචාර්ය දයා

 මෙරට ආර්ථිකයට ශ්‍රී ලාංකීය මුස්‌ලිම් ජනතාවගෙන් ලැබෙන දායකත්වය පිළිබඳ සමාජ සංවාද ඇති නොවීම කණගාටුවට කරුණකි.  ඉස්ලාමය අරාබියට හඳුන්වා දුන් විට, ශ්‍රී ලංකාවේ වෙළඳාම් කළ බොහෝ අරාබි වෙළඳුන් රට හැර යාමට තීරණය කළහ.

 අරාබි වෙළෙන්දන් ශ්‍රී ලංකාව හැර යාමෙන් රටේ ආර්ථිකයට විශාල ප්‍රශ්න ඇති වන බව එකල අනුරාධපුර රාජධානියේ දෙවන අග්‍රබෝධි රජු අවබෝධ කරගෙන සිටියේය.  අරාබි වෙළෙන්දන්ට රට තුළ රැඳී සිටීමටත් ඔවුන්ට සම්පූර්ණ ආගමික අයිතිවාසිකම් ලබා දීමටත් රජු පොරොන්දු විය.

 ඉන්පසු දෙවන අගබෝදි රජු තම විශේෂ දූතයෙකු නබි (සල්) තුමාණන් හමුවීමට මදීනාවට යවා ඇත.  නබි (සල්) තුමාණන්ට ලියූ ලිපියක රජු සඳහන් කර ඇත්තේ ශ්‍රී ලංකාවේ අරාබි වෙළඳුන්ට එම ආගම පහසුවෙන් අනුගමනය කළ හැකි වන පරිදි ඉස්ලාමයේ මාර්ගෝපදේශ ඇතුළත් ලියවිල්ලක් තම නියෝජිතයා වෙත එවිය යුතු බවයි.

 ලංකා රජුගේ දූතයා ජෙඩා වරායට ළඟා විය.  ඉන්පසු ගොඩබිමින් මදීනාවට ළඟා විය.  ශ්‍රී ලංකා දූතයා එහි යන විට නබි (සල්ලල්ලාහු අලෙයිහි වසල්ලම්) තුමාණන් මෙලොව හැර ගොස් ඇත.  එදින මදීනා පාලනය කරමින් සිටියේ අබු බකර් (රළියල්ලාහු අන්හු) තුමාය.  දූතයා ඔහු හමුවී අනුරාධපුර රාජධානියේ දෙවන අක්කබෝඩි රජුගේ ලිපියක් ඔහුට දුන්නේය.

 මහාචාර්ය දයා අමරසේකර

 සමාජ විද්‍යා පීඨය

 පේරාදෙණිය විශ්වවිද්‍යාලය

No comments

Powered by Blogger.