Header Ads



லைசியம் சர்வதேச பாடசாலை முன் ஆர்ப்பாட்டம்


வத்தளை மற்றும் நுகேகொடையில் உள்ள லைசியம் சர்வதேச பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.


கேம்பிரிட்ஜ் O/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏற்பாடுகளை செய்ய முடியாது என பாடசாலை நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.


மேலும், குறித்த பரீட்சைகளுக்கான வசதியையும், பரீட்சைக்கான மண்டபத்தையும் தம்மால் ஒழுங்கு செய்துகொடுக்க முடியாது என்றும் அறிவித்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் தெரிவித்தனர்.


பாடசாலை அதிகாரிகள் இதற்கான தெளிவான காரணத்தை தமக்கு தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.


மேலும், குறித்த பாடசாலையில் இதுவரை இருந்த கேம்பிரிட்ஜ் பாடநெறியை திடீரென மாற்றியுள்ளதாக, பாடசாலை நிர்வாகத்தின் மீதும், அதிகாரிகள் மீதும் பெற்றோர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.


குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வு வேண்டும் என்றும் பெற்றோர் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.