தேர்தலில் முக்கிய புள்ளிகளை களமிறக்கியது தேசிய மக்கள் சக்தி
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்பட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதன்படி ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மாத்தறை மாநகர சபைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும், கம்பஹா மாநகர சபைக்கு மஹிந்த ஜயசிங்கவும், அநுராதபுரம் நகர சபைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவும் போட்டியிடுகின்றனர்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 340 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment