கோட்டாபய அனுபவிக்கும் சலுகைகள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்களும், உணவு, பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாக இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் இவ்வாறான செலவை மேற்கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாட்டின் ஒட்டுமொத்த செலவீனங்களைப் பார்க்கும் போது இது ஒரு சிறிய செலவு மட்டுமே என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், 1977ம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் செலவு வருமானத்தை விட அதிகமாக உள்ளது, அன்றாட செலவுகளுக்கு போதிய வருமானம் இல்லாத நாடாக நாம் வந்துள்ளோம்.
இந்த சிறிய செலவுகளைப் பார்க்கும் முன், பெரிய அளவிலான செலவுகளைப் பார்க்க வேண்டும். அதாவது அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் வட்டி செலுத்துதல். இந்த பெரிய அளவிலான திட்டங்களில் எதையும் குறைக்க முடியாது.
தற்போது, நாட்டின் அமைச்சர்கள் கூட அதிக அளவில் நன்கொடை அளித்துள்ளனர். நான் இப்போது நான்கு அமைச்சுக்களின் பாரத்தை தனியாளாக சுமந்து வருகிறேன். இதனால் எஞ்சும் தொகையை பாருங்கள் என்றார்.
லங்காசர
950,000 ரூபாவை அரசாங்கம் வீணாக்குவதை உடனடியாக நிறுத்தி, அந்தப் பணத்தை கடுமையாக வாழ்க்ைகப் போராட்டம் நடாத்தும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். நாட்டின் பெறுமதியாக கட்டடங்கள்,சொத்துக்களை விற்றும் அரச கொள்வனவுகளில் பெற்ற கோடான கோடி டொலர்களையும் பதுக்கிவைத்துக் கொண்டு பொதுமக்களின் சொத்துக்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவனைச் சிறையில் போட்டு அத்தனை பணத்தையும் வீணாக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தி அவற்றை உரியவர்களுக்கு தகுதியானவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
ReplyDelete