தேர்தலை ஒத்திவைக்க முயலும், அரசாங்கத்தின் முயற்சியைத் தோற்கடிப்போம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள்.
நேற்றைய தினம் கூட உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பாதகமான கருத்துக்களையே கூறி வருகின்றன.நேற்றும் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு இது சரியான தருணம் அல்ல எனவும், தேர்தல் என்பது மக்களுக்கு சுமை என்பதாகவும் கூறுவதை நான் கண்டேன்.இந்தத் தேர்தலுக்கு அரசாங்கம் எவ்வளவு அஞ்சுகிறது என்பதை இப்போது பார்த்திருப்பீர்கள், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொட்டுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தொடர்ச்சியாக ஏதாவது குண்டுகளை வீசி ஒவ்வொரு பிரச்சினையையும் போட்டு தேர்தலை நிறுத்த முயல்கின்றன.
தேர்தல் நடத்தக்கூடாது என அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் எப்படி கூற முடியும். தேர்தல் ஆணைக்குழு வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியை நிர்ணயம் செய்து தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடு சார்ந்த நடவடிக்கைகளையும் நிறைவுசெய்துள்ளது.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி மொட்டுடன் இணைந்து தேர்தலை பிற்போடும் நம்பிக்கையில் உள்ளது.யானை மொட்டு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஊடகங்களுக்கு வந்து வாக்களிப்பது பலவாறு கருத்துக்களைக் கூறுகின்றனர்.தேர்தல் நடத்துவது சரியல்ல.தேர்தலுக்கு பணம் இல்லை என்கிறார்கள் ஆனால் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சுகள் இராஜாங்க அமைச்சுக்களுக்குத் தேவையான நிதியை பயன்படுத்துகின்றனர்.மக்களுக்குரிய வாக்குரிமையை வழங்க யானை மொட்டு கூட்டணியின் பிரதிநிதிகள் பணம் இல்லை என்று கூறுகிறார்கள்,தேர்தலைத் தடுக்க குண்டுகளை ஒவ்வொன்றாக வீசுகிறார்கள்.
அங்கத்தவர்களின் எண்ணிக்கைகளைக் குறைக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார்,அதன்பிறகு,இளைஞர் பிரதிநிதித்துவத்தை உருவாக்க விரும்புவதாகக் கூறினார்,சுற்றறிக்கை வெளியிடப்பட்டு மாற்றப்பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக கதைகளைச் சொன்னார்.
அதற்கெல்லாம் உடன்படுகிறோம்,ஆனால் அந்த பிரச்சினையை மட்டும் காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்கும் போர்வையில் செய்தால் அதற்கு நாம் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம்.
ஒவ்வொரு விடயத்தையும் பயன்படுத்தி தேர்தலை ஒத்தி வைக்க முயலும் அரசாங்கத்தின் முயற்சியைத் தோற்கடிப்போம்.மக்கள் இறையாண்மையை பாதுகாக்க நாம் முன்வருவோம்.
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ளக் கூடிய அனைத்திலும் தலையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியாக மக்களின் உரிமைகளுக்காக போராட முன்வருவோம்.
மேலும்,உள்ளூராட்சி அமைப்புகளை ஒழுங்குபடுத்த வேண்டும்,கண்கானிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவிடம் கூறி வருகிறோம்,எழுத்து மூலமாகவும் தெரிவித்து வருகிறோம்.இது தேர்தல் காலம், தற்போது வேட்புமனு தாக்கல் திகதிகள் முடிவடைந்தாலும் உள்ளூராட்சி அதிகாரிகள் திடீரென கூட்டங்களை நடத்தி ஒப்புதல் அளித்து வருகின்றனர்.தேர்தல் பிரசாரங்களுக்கு இந்த பணம் செலவளிக்கப்படலாம்.தேர்தல் என்று தெரிந்தும் மக்களிடம் செல்ல முடியாமல் மக்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தேர்தல் சட்டத்தை மீறி பொதுநிதியை பயன்படுத்த தற்போது ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் என்பதால் காலத்தால் அழியாத மக்கள் அன்பு தற்போது உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது,இந்த நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏமாறாதீர்கள். இதுவரை இந்த நாடு ஏமாந்து விட்டது.தேவையான மாற்றத்தை ஏற்படுத்த தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள்.
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் தேர்தல் சட்டத்தை மீறியதாக எங்களுக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.உடனே இது குறித்து தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்.தவறாக நடந்த கொண்ட உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் உடனடியாக அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு ஏதாவது நடந்தால், புகைப்படங்களை எடுத்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்புங்கள் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு அனுப்புங்கள். நீங்கள் மற்ற கட்சிகளை ஆதரிப்பீர்களானால்,அந்த கட்சிகளுடன் தொடர்புடையவர்களுக்கு அனுப்புங்கள்.
இங்கு இந்த தவறான செயலை எதிர்க்க வேண்டும்.தவறு செய்தால் அதை திருத்த மக்கள் முன்வர வேண்டும்.உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை மொட்டுக்கே உள்ளது.எனவே இந்த தவறான செயற்பாடுகளில் நாட்டு மக்கள் சிக்கக்கூடாது.இந்நேரத்தில் விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்கு சொல்கிறோம்,இப்போதுதான் பொருட்கள் விநியோகம் தொடங்கப்போகிறது,சலுகைப் பொதிகள் வீடு தேடி வரும்.இதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Post a Comment