கொழும்பு, கண்டி, புத்தளத்தில் யானை சின்னத்தில் போட்டியிட பொதுஜன பெரமுன இணக்கம்
ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இன்று -10- கைகோர்த்தன.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை இலக்கு வைத்து புதிய கூட்டமைப்பை உருவாக்குதல், பொது சின்னத்தின் கீழ் போட்டியிடுதல் உள்ளிட்ட பொதுவான விடயங்களை முன்னிறுத்தி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களின் அமைப்பாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
இதனிடையே, தேர்தலில் தலையிடப்போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி, கூட்டணிக்கான சந்திப்புகளை ஜனாதிபதி செயலகத்தில் எவ்வாறு நடத்துவார் என போராட்டக்கள சட்டத்தரணிகள் அமைப்பு இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியது.
Post a Comment