வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கல்முனை மாநகர சபைக்காக வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுவதை தடுக்கும் வகையில், உயர் நீதிமன்றம் இன்று -17- இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏ.எம்.மொஹமட் சலீம் என்பவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த தடை உத்தரவு நாளை மறுதினம் (19) வரை அமுலில் இருக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Post a Comment